இலங்கையில் GalleZone Soluitons நிறுவனமே YouTube இன் முதல் உள்ளடக்கப் பங்காளியாகும். 12 வருடங்களுக்கும் மேலான தொழில்துறை அனுபவத்தினாலும், இலங்கையில் உள்ளடக்கங்களை உருவாக்குபவர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காகவும் YouTube இந்த மதிப்புமிக்க அந்தஸ்தை எங்களது நிறுவனத்திற்கு வழங்கியது.
இலங்கை YouTube உள்ளடக்க நிர்வாகத் துறையில் நாங்கள் முன்னணியில் இருக்கிறோம். YouTube இல் இருந்து 2013 இல் உள்ளடக்க கூட்டாளர் அந்தஸ்தைப் பெற்றோம், தற்போது எங்கள் சேவைக்கு கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகின்றது. இந்த நீண்ட காலத்தில், நாங்கள் பல இலக்குகளை நிறைவேற்றி, மேலும் மேலும் கூட்டாண்மைகளைப் பெற்றுள்ளோம் மற்றும் பல உலகப் புகழ்பெற்ற உள்ளடக்க மேலாண்மை நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளோம்.
நாங்களே இலங்கையின் முதல் மற்றும் ஒரே அதிகாரப்பூர்வ YouTube லைவ் ஸ்ட்ரீமிங் பார்ட்னர். இந்தச் சாதனையுடன், கண்டி தலதா பெரஹேராவை யூடியூபில் நேரலையாக நெட்காஸ்ட் செய்து இலங்கையில் முதல் யூடியூப் நேரடி ஒளிபரப்பை நடாத்தினோம். அந்த வெற்றிகரமான நிகழ்வின் பின்னர், இலங்கையில் நூற்றுக்கணக்கான கூட்டாண்மை மற்றும் தனிப்பட்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்வுகளை நாங்கள் நடாத்தியுள்ளோம்.
தற்போது, 500 க்கும் மேற்பட்ட இலங்கை கலைஞர்கள் எங்களுடன் பதிவுசெய்துள்ளனர் இதனால் அவர்களால் இலகுவில் YouTube ஐ நிர்வகிக்க முடிகிறது. மேலும் அனைத்துக் கலைஞர்களும் திருப்திகரமான சேவையைப் பெறுகின்றனர் மற்றும் எதிர்காலத்திலும் அவர்களுக்கு உதவ நாங்கள் விரும்புகிறோம்.
பொழுதுபோக்கு உள்ளடக்கங்கள் மட்டுமல்ல, டெலி ட்ராமாக்கள், திரைப்படங்கள், நகைச்சுவை என வேறு எந்த வகையான உள்ளடக்கங்களும் உகந்ததாக இருக்கும்.
உங்கள் உள்ளடக்கம் இணையத்தில் எவ்வாறு செயற்படுகிறது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள, அனைத்துப் புள்ளிவிவரங்களையும் வருவாய் அறிக்கைகளையும் உங்களுடன் பகிர்ந்துகொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். எனவே வருவாய் மற்றும் பிரபல்யம் போன்றவற்றை நீங்கள் இலகுவில் அறியலாம்.
உங்கள் உள்ளடக்கங்களை நாங்கள் எப்போதும் கண்காணிப்போம், அதில் ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால், YouTube இடம் இருந்து நாங்கள் ஒரு அறிவிப்பை பெறுவோம், இதன் மூலம் உடனடியாக நாங்கள் அதை சரி செய்ய முடியும்.
வீடியோ Views, உள்ளடக்க நகல், வருவாய் மற்றும் தேவையான அனைத்து தகவல்களுடன் மாதாந்திர அறிக்கைகளை நாங்கள் வழங்குவோம். உண்மையான உள்ளடக்கப் பதிவுகளை பகிறுவோம், மேலும் எதைப் பற்றிய அறிக்கையையும் நீங்கள் எங்களிடம் நிகழ்நேரத்தில் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
மியூசிக் பிளஸ் ரெக்கார்ட்ஸ்
இலங்கையில் யூடியூப் மற்றும் அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் மிகவும் அனுபவம் வாய்ந்த டிஜிட்டல் உள்ளடக்க மேலாண்மை நிறுவனம்.
தொடர்பு கொள்ளும் விவரங்கள்
Follow Us
© 2025 Gallezone Solutions PVT LTD. All Rights Reserved.
With Music Plus Records